மியான்மர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக
நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
மியான்மர் நாட்டிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி அழிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்து, , நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மியான்மர் (பர்மா) நாட்டில் வசித்துவரும் முஸ்லிம்களை பௌத்த மதத்தினர் கொடூரமாக சித்திரவதைசெய்து, கொலை செய்வதைக் கண்டித்தும், இந்திய நாட்டுக்கு வரும் மியான்மர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து தங்கவைக்க வேண்டும், மியான்மர் நாட்டுத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்றவும், ரோஹிங்யா (பர்மா)முஸ்லிம்கள் இனப் படுகொலை செய்வதைக் கண்டித்தும், கொலை வெறிபிடித்த ரோஹிங்கிய ஜனாதிபதிபக்குக் கொடுக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைத் திரும்பப் பெற வேண்டும், ஐ.நா சபை உடனடியாக முஸ்லிம்கள் மீது படுகொலை நடத்தும் மியான்மர் அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, அகதிகளாக வந்திருக்கும் மியான்மர் முஸ்லிம்களை அவர்கள் நாட்டுக்குத் திரும்ப அனுப்புவோம் என்ற அறிவிப்பை மோடி அரசு மறுபரிசீலனைசெய்து திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 comments:
Post a Comment