பாடசாலை நேரத்தில்
மாணவர்கள்
போராட்டங்களில்
ஈடுபடத் தடை
பாடசாலை
நேரத்தில் மாணவ, மாணவியர் போராட்டங்களில் ஈடுபடுவதனை தடை செய்யும் வகையில் விசேட சுற்றுநிருபமொன்று
வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி
அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்கள்
மற்றும் வலய பணிப்பாளர்களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த
சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
கல்வி
அமைச்சு, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியின்றி
பாடசாலை காலத்தில் மாணவ மாணவியரை பல்வேறு போராட்டங்களில் பங்கேற்கச் செய்தல், அனுமதியின்றி
பாடசாலை பூமியில் பிரவேசித்தல் ஆகியனவற்றுக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது.
பாடசாலை
மாணவ மாணவியரை பிழையாக வழிநடத்தும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு
திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளினால் கற்றல் மற்றும் கற்பித்தல்
நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை
நேரத்தில் பாடசாலை மாணவ, மாணவியர் போராட்டங்கள் அல்லது வேறும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு
அனுமதியளிக்கப்படாது என சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment