கிழக்கு மாகாண சபை

கோரமின்மையால் சபை ஒத்திவைப்பு




20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக இன்று 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அவசரமாகக் கூடிய கிழக்கு மாகாண சபை, கோரமின்மையால் மீண்டும் 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று கூடிய போதும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டதையடுத்து, தவிசாளரால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களும் தமது வருகையை தவிர்த்து மறைமுக ஆதரவு வழுங்குவதை காண முடிகின்றது.

இன்றைய கிழக்கு மாகாணசபை அமர்வில் எதிர்கட்சி அங்கத்தவர்கள் நால்வர் மாத்திரமே சமுகமளித்திருந்தனர்.

கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண அமர்வின் போது 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னரே அதனை ஆராய்ந்து, ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா எனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  


இவ்வாறான நிலையில், எந்தவிதத் திருத்தங்களும் முன்வைக்கப்படாமல் மீண்டும் இன்று கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு கோரபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top