மியான்மர் மீது பொருளாதார தடை வருமா?

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல்களால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மிக கொடுமையான இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க .நா சபை நாடுகளின் உதவியை நாடியுள்ளது வங்கதேசம்.
இந்நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது.

இதன் அடுத்த கட்டமாக மியான்மர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இதில் பொருளாதார தடையும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top