சம்மாந்துறையில் மூன்று மாணவிகளுக்கு
அதிபர் செய்த கொடூரம்!!
10 வயது
மாணவிகள் மூன்று
பேரை துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அதிபர் ஒருவர்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை
கல்வி வலையத்திற்குட்பட்ட
பாடசாலையொன்றின் அதிபர் ஒருவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த
அதிபர் கடந்த
மாதங்களின் மூன்று சந்தர்ப்பத்தில் இவ்வாறு குறித்த
மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு
உட்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர்
, இது தொடர்பில்
சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபைக்கு
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த அதிபர்
நேற்று கைது
செய்யப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறையைப்பிறப்பிடமாகக் கொண்ட இவர் வெளியூரில் கடமை புரியும் போதும் இவ்வாறான
சம்பவம் ஒன்றில் அகப்பட்டு காப்பாற்றப்பட்டவர்எனத் ரிவிக்கப்படுகின்றது. சம்மாந்துறை பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment