ஜிம்பாப்வே ஜனாதிபதி முகாபேயின் வசந்தமாளிகை
( புகைப்படங்கள்)
ஜிம்பாப்வே
நாட்டில் பெரும்பாலான
மக்கள் வறுமையில்
பரிதவிக்கும் நிலையில் அதன் ஜனாதிபதி 25 படுக்கை
அறைகள் கொண்ட
மாளிகையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
ஜிம்பாப்வே
அரசியல் கடும்
நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதன்
37 ஆண்டு கால
ஜனாதிபதி மற்றும்
அவரது மனைவியின்
சொகுசு வாழ்க்கை
குறித்த அதிரவைக்கும்
தகவல்கள் அம்பலமாகி
வருகிறது.
93 வயதான
முகாபே தமது
2-வது மனைவியான
க்ரேசுடன் ப்ளூ
ரூஃப் எனப்படும்
சொகுசு அரண்மனையில்
வாழ்ந்து வருகிறார்.
25 படுக்கை
அறைகள் கொண்ட
இந்த அரண்மனையின்
மொத்த மதிப்பு
10 மில்லியன் டொலர்கள் என தெரிய வந்துள்ளது.
44 ஏக்கர்
பரப்பளவு கொண்ட
இந்த வசந்தமாளிகையானது
பொதுமக்கள் அண்டாத வகையில் அதி நவீன
பாதுகாப்பு அம்சங்களுடன் அமைந்துள்ளது.
மேற்கத்திய
நாடுகளை மிஞ்சும்
கலை நயத்துடன்
உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையின்
புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது
வைரலாகியுள்ளது.
0 comments:
Post a Comment