உரத்துக்கான தட்டுபாட்டு பிரச்சனை

இன்று இரவு தீர்க்கப்பட்டுவிடும்

200 லொறிகள் மூலம் உரவிநியோகம் ஆரம்பம்




நாட்டில் ஏற்பட்டுள்ள உரத்துக்கான தட்டுபாட்டு பிரச்சனை இன்று இரவு தீர்க்கப்பட்டுவிடும் என்று அமைச்சரவை துணை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாக பாகிஸ்தான் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த உரம் இன்று இரவு இலங்கையை வந்தடையும். இதனை துறைமுகத்தில் இருந்து நாட்டில் உரம் தேவைப்படும் பிரதேசங்களுக்கு 200 லொறிகள் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பாகிஸ்தானில் உரத்தை பெற்று கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்நாட்டில் நிலவிய உரத்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையேயாகும்.
ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து இந்த தடையை நீக்க பாகிஸ்தான் அரசாங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டது.உரவிநியோகத்தில் தாமதம் ஏற்பட இதுவே காரணம் என்றும் அமைச்சர் இதன்போது விபரித்தார்.
உரத்தை பெற்றுகொள்ள சமர்ப்பிக்கப்பட்ட 2 டென்டர்கள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன உரத்தை வழங்கிய நிவாரண நிதியில் இவ்வாறான பற்றாகுறை ஏற்படவில்லை. உரத்திற்கான தட்டுபாடு மாத்திரமே நிலவியது என்றும் தெரிவித்தார் இதனால் உரத்திற்காக தட்டுபாடு நீங்கிவிடும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top