சாய்ந்தமருது பள்ளிவாசல்
எவருடனும்
இரகசிய
ஒப்பந்தம் செய்யவில்லை’
மக்களின் அபிலாஷைகளை நாங்கள் ஒருபோதும்
எவரிடமும் அடகு வைக்க மாட்டோம்.
“தேர்தலில்
வெற்றியீட்டிய பின்னர், அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து
ஆட்சியமைப்பதற்கு, எமது சாய்ந்தமருது பள்ளிவாசல்,
எவருடனும் இரகசிய
ஒப்பந்தம் செய்து
கொள்ளவில்லை” என, கல்முனை மாநகர சபைத்
தேர்தலில், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல்
மக்கள் பணிமனை
சார்பில் களமிறங்கியுள்ள
சுயேட்சைக்குழு வேட்பாளர் ஏ.ஆர்.எம்.அஸீம் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது
வைத்தியசாலை வீதியில், சுயேட்சைக் குழுவுக்கான தேர்தல்
காரியாலயமொன்று, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையின்
தலைவர் வை.எம்.ஹனிபாவினால்,
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்காரியாலயத் திறப்பு வைபவத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
“சாய்ந்தமருது
பிரதேச செயலக ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை
தலைமையில் இடம்பெற்ற
இக்காரியாலயத் திறப்பு விழாவில் வேட்பாளர் ஏ.ஆர்.எம்.அஸீம் தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
"சாய்ந்தமருதில் தற்போது இடம்பெறுவது அரசியல்
நடவடிக்கை இல்லை.
மாறாக, எமதூர்
மக்களின் மூன்று
தசாப்த காலக்
கோரிக்கையான தனியான உள்ளூராட்சி அவசியம் வேண்டுமென,
தேசியத்துக்கு எடுத்துக்கூறுகின்ற ஒரு சர்வஜன வாக்கெடுப்பு
மட்டுமேயாகும். “இது எவரும் நிரந்தரமாக அரசியல்
செய்வதற்கான சந்தர்ப்பமல்ல.
“சாய்ந்தமருது
பிரதேசத்திலுள்ள ஆறு வட்டாரங்களையும் வென்று, போனஸ்
ஆசனங்களையும் பெற்றுக்கொண்டு, வேறு கட்சியுடன் கூட்டாட்சி
செய்வதற்கு, எமது சாய்ந்தமருது பெரிய
பள்ளிவாசல் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக, சிலர்
கதைகளைப் பரப்பி
விட்டுள்ளனர். இந்தக் கூற்றில் எவ்வித உண்மையுமில்லை.
“சாய்ந்தமருது
மக்களின் அபிலாஷைகளை
நாங்கள் ஒருபோதும்
எவரிடமும் அடகு
வைக்க மாட்டோம்.
நாங்கள் நிச்சயமாக
யாருக்கும் முட்டுக்கொடுக்கப் போக மாட்டோம் என்று
உறுதியாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்.
“சாய்ந்தமருது
பிரதேசத்தில் பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலில் குழப்பங்களை
ஏற்படுத்த சிலர்
திட்டமிடுகின்றனர். சண்டை என்றால்
எங்களுக்குச் சக்கரைப்பொங்கல். ஆனால், நாங்கள் ஜனநாயக
முறையில் தேர்தலை
எதிர்கொள்வோம். இலக்கை அடைவதற்காய் பொறுமை காப்போம்"
இவ்வாறு வேட்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.எம்.அஸீம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment