கணித பாட கற்கை நெறிக்கு பொறுப்பான
50 அதிகாரிகளுக்கு சிங்கப்பூரில் பயிற்சி
கணித
பாட கற்கை
நெறிக்கு பொறுப்பான
அதிகாரிகளின் தொழில் மேம்பாட்டை இலக்காக கொண்டு
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள விசேட கணித பயிற்சியில்
கலந்து கொள்வதற்காக
இத்துறையை சேர்ந்த
50 பேருக்கு விமான பயணத்திற்காக விமான சீட்டுகள்
வழங்கப்பட்டுள்ளன.
இது
தொடர்பாக நிகழ்வு
கல்வி அமைச்சின்
செயலாளர் சுனில்
ஹெட்டியாராச்சி தலைமையில் இன்று கல்வியமைச்சில் நடைபெற்றது.
சிங்கப்பூரிலுள்ள
தேசிய கல்வி
நிறுவனத்தினால் நடத்தப்படும் இந்த குறுகியக்கால பயிற்சி
வேலைத்திட்டத்தில் இலங்கையில் கணித
பாட கற்கை
நெறிக்கு பொறுப்பான
மாகாண, வலய
கல்வி அதிகாரிகள்,
தேசிய கல்வி
நிறுவனம் மற்றம்
கல்வி அமைச்சு
சேர்ந்தோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இரண்டு
கட்டங்களின் கீழ் இரண்டு குழுக்களுக்கு இந்த
பயிற்சி வழங்கப்படவுள்ளன.
0 comments:
Post a Comment