தமண எக்கல்ஓயா படகு விபத்தில்
மற்றொரு சடலமும் மீட்பு
அம்பாறை,
எக்கல்ஓயா படகு
கவிழ்ந்த சம்பவத்தில்
காணாமல் போன
பாடசாலையின் காவலாளியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எம். விபுல
பண்டார (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக
பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதன்
அடிப்படையில், குறித்த விபத்தில் காணாமல் போன
நால்வரும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களது சடலங்கள்
தற்போது, அம்பாறை
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள்
இன்று (09) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ்
ஊடக பேச்சாளர்
ருவன் குணசேகர
தெரிவித்துள்ளார்.
பதுளை,
கந்தன சிறி
சீவலி வித்தியாலயத்திலிருந்து
கல்விச் சுற்றுலா
சென்ற மாணவர்களுள், பாடசாலையின்
அதிபர் உள்ளிட்ட
09 பேர், அம்பாறை,
தமணவிலுள்ள எக்கல்ஓயாவில் படகில் சென்றுள்ளனர்.
இதன்போது
படகு கவிந்ததில்
அனைவரும் நீரில்
மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்களால் அதிலிருந்த
05 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு,
பாடசாலையின் அதிபர் (53), ஆசிரியர்
(43), காவலர் (31) மற்றும் மாணவர்
ஒருவர் (13) உள்ளிட்ட நால்வர் காணாமல் போயிருந்தனர்.



0 comments:
Post a Comment