பொலன்னறுவை மாவட்டத்தில் வழிபாட்டுத்தளங்களின்
அபிவிருத்திக்காக ரூபா 134 மில்லியன் நிதி
'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக 14.3 மில்லியன் ரூபா செலவில் லங்காபுர புலஸ்திகம சிறிபரகும் பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி பிக்குமார்களுக்கான விடுதி நேற்று. ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
பிக்குகளின் தங்குமிட நிர்மாணப் பணிகள் இலங்கை இராணுவத்தின் 15வது பொறியியல் சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் சோமாவதீ ரஜமகா விகாராதிபதி பஹாமுனே ஸ்ரீP சுமங்கல தேரர், இலங்கை ராமஞ்ஞ நிக்காயவின் செயலாளர் அட்டன்கனே சாசனரத்தன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பொலன்னறுவை மாவட்டத்தின் வணக்கஸ்தலங்களின் அபிவிருத்திக்காக 134 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 20 அறநெறி கல்வி கட்டிடங்களின் நிர்மாணப்பணிக்களுக்காக 24 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment