தி.மு.க தலைவர் கருணாநிதி தொடர்பில்
காவேரி மருத்துவமனையின் 7ஆவது அறிக்கை
சற்றுமுன் வெளிவந்தது!
அனைவரும் அதிர்ச்சியில்
தி.மு.க தலைவர் கருணாநிதி
தொடர்பில் காவேரி
மருத்துவமனையின் 7ஆவது அறிக்கை சற்றுமுன்னர் வெளியாகியது.
இதில்
“கருணாநிதியின் உடல் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
நாம் எவ்வளவு
மருத்துவ சிகிச்சைகளை
வழங்கிய போதும்
அவருக்கு எவ்வித
முன்னேற்றமும் ஏற்படவில்லை. கருணாநிதியின்
முக்கிய உறுப்புகள்
அனைத்தும் செயலிழந்துவிட்டன.
எம்மால் முடிந்த
வரை முயற்சி
செய்கின்றோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின்
உடல்நிலை குறித்து
இதுவரை காவேரி
மருத்துவமனை 6 அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது.
இதில்
நேற்று மாலை
6.30 மணிக்கு வெளிவந்த 6ஆவது அறிக்கையின் படி
“கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்திருந்தது. அடுத்த
24 மணி நேரத்தில்
அவருக்கு கொடுக்கப்படும்
சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது
என்பதை வைத்தே
அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும்” என ஆறாவது
அறிக்கை வெளிவந்தது.
அந்த
வகையில் இன்று 4.30 மணிக்கு
காவேரி மருத்துவமனையில்
7ஆவது அறிக்கை
வெளிவரும் என
தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கை பலராலும்
எதிர்பார்க்கப்பட்டது.
சற்றுமுன்
வெளிவந்த அறிக்கையால்
அனைவரும் மேலும்
அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment