கருணாநிதி கவலைக்கிடம்
குடும்பத்தார் கண்ணீர்

கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் அவரது குடும்பத்தார் கண்ணீருடன் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லம் திரும்பினர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்ற நிலையில் கடந்த 27-ம் திகதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கடுமையாகப் பாதித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரர் கருணாநிதி. அவரின் பிள்ளைகள் மு..முத்து, மு..ஸ்டாலின், மு..அழகிரி, மு..தமிழரசு, செல்வி, கனிமொழி ஆகியோரும்,பேரன் பேத்திகளும் கருணாநிதி மீது அளவற்ற பாசம் வைத்துள்ளனர்.
பேரன் பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என அவர் குடும்பத்தினர் அவர் வீட்டில் ஓய்வில் இருந்த நேரத்தில் தாத்தாவுடன் இருந்தனர். கருணாநிதி குடும்பத்தாருடன் செலவிட்ட அதிகப்படியான நேரம் அதுவாகத்தான் இருக்கும்.
கருணாநிதி உடல் நலிவுற்ற நிலையில் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த தகவலைக் கேட்டு கவலையுடன் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியானதை அடுத்து தொண்டர்கள் கதறி அழுதனர்.
அவர்களது துக்கம் குடும்பத்தாரையும் தொற்றிக்கொண்டது அவரது நிலையைக் கேட்டு அவரது மகள் செல்வி, மருமகள்கள் துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு உள்ளிட்டோர் கதறி அழுதபடி காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் திரும்பினர். இதைப்பார்த்த மற்றவர்களும் கண்ணீர் வடித்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top