தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு
தமிழகம், புதுவையில் நாளை பொது விடுமுறை

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இதனை அடுத்து, நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதுவையிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top