கருணாநிதியின் இழப்பை எண்ணி
நீண்ட நாட்களுக்கு வருத்தப்படுவோம்
நடிகை த்ரிஷா தெரிவிப்பு

 கருணாநிதியின் இழப்பை எண்ணி நீண்ட நாட்களுக்கு வருத்தப்படுவோம்என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
மறைந்த கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நேரில் வந்து கருணாநிதியின் உடலைப் பார்க்க முடியாதவர்கள், இன்று அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மதியம் நடிகை த்ரிஷாவும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய த்ரிஷா, “சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி ஆகியோரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இழப்பு, எல்லாருக்குமான இழப்பு. கவிஞர், எழுத்தாளர் எனப் பலத் திறமைகள் கொண்ட மிகப்பெரிய மனிதர். அவருடைய இழப்பை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம்என்று தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top