இன்று10ம்திகதி வெள்ளிக்கிழமை இரவு 08.00 மணிக்கு
சாய்ந்தமருது
வைத்தியசாலை
அபிவிருத்திச் சபை புனரமைப்புக் கூட்டம்.
ஆர்வம் உள்ளவர்கள் வருகை தருமாறு
அன்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நீண்ட
வரலாற்றைக் கொண்ட சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச்
சபை புனரமைப்புச்
செய்யப்படுவதற்கான கூட்டம் இன்று 2018.08.10ம்
திகதி வெள்ளிக்கிழமை
இரவு 08.00 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை
வளாகத்தில் நடைபெறவுள்ளதாக வைத்தியசாலை
பொறுப்பதிகாரி பொது அறிவித்தல் விடுத்துள்ளார்.
நடைமுறையில்
காணப்படும் அபிவிருத்திச் சபை செயலிழந்து காணப்படுவதால்
வைத்தியசாலை அபிவிருத்தி மந்த கதியில் காணப்படுவதாக
பொதுமக்கள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து இவ்விடயம்
பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளரின்
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது
விடயமாக உரிய
நடவடிக்கை எடுக்குமாறு
பிராந்திய பணிப்பாளர்
வைத்தியசாலை பொறுப்பதிகாரியை பணித்துள்ளதாக
அறிய முடிகின்றது.
சாய்ந்தமருது
வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு பௌதீக வளத்
தேவைகளை நிறைவு
செய்து இப்பிராந்தியத்தில்
சிறந்த சுகாதார
சேவைகளை வழங்கும்
நிலையமாக மாற்ற
ஆர்வலர்கள் முன்வந்துள்ளனர்.
எனவே,
சாய்ந்தமருதில் உள்ள உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக
ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், வர்த்தகர்கள்,
பள்ளிவாசல் நிருவாகிகள், இளைஞர்கள் மற்றும் சிவில்
அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும்
2018.08.10 இரவு 08.00 மணிக்கு வைத்தியசாலை
வளாகத்திற்கு வருகை தருமாறு அன்பாக கேட்டுக்
கொள்ளப்படுகின்றீர்கள்.
0 comments:
Post a Comment