கல்முனை மாநகர சபையின்
ஆணையாளராக எம்.சீ.அன்ஸார்
ஆளுநர் நியமனக் கடிதத்தை வழங்கினார்
கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக எம்.சீ.அன்ஸார், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக எம்.சீ.அன்ஸார் கடமையாற்றி வந்த நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பகுதிகளின் பிரதேச செயலகங்களில் அவர் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி அஹமது லெவ்வை முஹம்மது
காசிம் சாலைக்குட்டி சவ்தா உம்மா தம்பதிக்கு முதல் மகனாக மருதமுனையில் பிறந்த இவர்
தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியலயத்திலும் உயர்கல்வியை
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும் கற்றார்.
0 comments:
Post a Comment