8000 வெளிநாட்டவர்களை
நாடு கடத்தத் தயாராகும்
இலங்கை!
சுற்றுலா
விசாவில் வருகை தந்து விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருக்கும் 8000 வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கு உள்நாட்டு விவகார அமைச்சு முடிவு
செய்துள்ளது.
இதற்கு
தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளை செய்வதற்கு அமைச்சரவையிலும் ஒப்புதல்
வாங்கியுள்ளது.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் 7900 வெளிநாட்டவர்கள் தாக்கியுள்ளதாக அந்த அமைச்சு மேலும்
குறிப்பிட்டுள்ளது.
“இவர்களில்
பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள். தற்போது விடுதிகள் கட்டுமானத்
துறைகளிலும், உணவகங்கள், விவசாயப் பண்ணைகளில் பணியாற்றுவதுடன், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
விசா
காலாவதியான பின்னரும் தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச்
சேர்ந்தவர்களாவர்.
குறிப்பாக
1,680 இந்தியர்கள், 936 பாகிஸ்தானியர்கள், 683 சீனர்கள்,
291 மாலைதீவு நாட்டவர்கள், 152 பங்களாதேஷ் நாட்டவர்கள், 42
ஜப்பானியர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.
மேலும்,
நெதர்லாந்தைச் சேர்ந்த 541 பேரும், உக்ரேனைச் சேர்ந்த 167 பேரும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த 172 பேரும், ரஷ்யாவைச் சேர்ந்த 157 பேரும், லெபனானை சேர்ந்த 157 பேரும், நைஜீரியாவை சேர்ந்த 130 பேரும், பிரான்சை சேர்ந்த 110 பேரும், பிரித்தானியர்கள் 44 பேரும், விசா காலாவதியான பின்னரும் இலங்கையில்
தங்கியுள்ளனர்.” என்றும் குடிவரவு குடியகல்வு
திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment