தர்மச்சக்கரமா ? இல்லையா ? என
 சரியான தீர்மானத்திற்கு
வர முடியாமல் தினறும் புத்தசமய ஆணையாளரும்
தரநிர்ணய சபையும் !!!
சந்தேக நபர் பிணையில் விடுதலை



இன்று (03.06.2019) தர்மச்சக்கர வழக்கு மஹியங்கனை நீதவான் A.A.P.லக்‌ஷ்மன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்பட்டது.

பொலிஸார்:-புத்தசமய அலுவல்கள் ஆணையாளருக்கும் தரநிர்ணய சபைக்கும் அனுப்பப்பட்ட ஆடையிலுள்ள வடிவத்தை ஒப்பிட்டு நோக்குவதற்கு தங்களிடம் சரியான தர்மச்சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிறார்கள்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தைச்சொல்வதால் நாம் சரியான முடிவுக்கு வரமுடியாமலிருப்பதால்ஆடையின் வடிவம் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்கு குறிப்பிட்ட இரு தரப்பினரும் தர்மச்சக்கரம் தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரையை எதிர்பார்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நாம்: (சட்டத்தரணிகள்) சட்டமா அதிபரின் வேலை வழக்கை தொடர்ந்து நடத்துவதா? இல்லையா? என முடிவெடுப்பதே!
குறிப்பிட்ட ஆடையிலிருக்கும் வடிவம் தர்மச்சக்கரமா ? இல்லையா என முடிவெடுப்பது புத்தசமய அலுவல்கள் ஆணையாளரே!

பொலிஸார்:- எவராலும் முடிவெடுக்க முடியாத ஒரு விடயமாக இது இருப்பதால் எமது உயர்அதிகாரிகள் எல்லோரதும் முடிவின் படி B அறிக்கையை திருத்தி பாரதூரமான ICCPR சட்டத்தின் பிரிவு குற்றமாகிய இனமுறுகல் குற்றச்சாட்டை நீக்கி சாதாரணமான தண்டணைச்சட்ட கோவையின் பிரிவு 291 B கீழ் மத நிந்தனை குற்றம் புரிந்ததாக இன்று மன்றில் அறிக்கையிடுகிறோம்.

நாம்:- (சட்டத்தரணிகள்)  (கடந்தவழக்குத்தவணையின் போது நாம் வைத்த வாதங்களை சுருக்கமாகவிபரித்ததுடன் )தண்டணைச்சட்டக்கோவையின் பிரிவு 291 (B) ன் கீழான தவறானது பிணையில் விடக்கூடிய தவறு என்பதால் சந்தேக நபரை பிணையில் விடும்படி வேண்டிக்கொள்கிறோம்.

எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் (வழக்கு தொடுனர்கள் மீது நாமும் உலக மக்களும் வைத்திருந்த அதிர்ப்திகள் அனைத்தையும் சுமந்த வார்த்தை பிரயோகங்களை ஹசலக பொலிசாரை நோக்கி காரசாரமாக அள்ளிவீசியதுடன்)ஆடையிலிருக்கும் வடிவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 04/11/2019 திகதி ஒத்தி வைத்து மஸாஹிமாவை பிணையில்விடுதலைசெய்தார்
.அல்ஹம்துலில்லாஹ்!

கொழும்பில் வசிக்கும் நாம், அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து இந்த வழக்கை பொறுப்பெடுத்த போது பலரின் அச்சுறுத்தல்களுக்கும் கேலிப்பேச்சுக்களுக்கும் ஆளாகினோம்.

புண்பட்டிருக்கும் எமது உள்ளங்களின் ரணங்களை மஸாஹிமாவினதும் அவரது உறவினர்களின் கண்களிலிருந்து வந்த ஆனந்த கண்ணீர் சுகப்படுத்திய சந்தோசத்துடன் நானும் எனது மனைவி நுஷ்ராவும் மஹியங்கனை நீதிமன்றை விட்டு வெளியேறினோம்.

சட்டத்தரணி சறூக் - 0771884448

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top