கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரம்!
அவசரமாக பிரதமரை சந்தித்துள்ள கூட்டமைப்பு
கல்முனை
வடக்கு பிரதேச
செயலகத்தை தரமுயர்த்தி
தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று
முன்தினம் பிரதேச
செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று
ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கல்முனை
சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல
சங்கரத்ன தேரர்,
கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர்
ஸ்ரீ ஸ்ரீ
க.கு.சச்சிதானந்தம் சிவம்
குரு உள்ளிட்டவர்கள்
மூன்றாவது நாளாகவும்
இன்று இந்த
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,
குறித்த விடயம்
தொடர்பில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற
உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்திருந்தார்.
மேலும்
தற்போது கிடைத்த
தகவல்களின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும்
சிறிநேசன் ஆகியோர்
பிரதமரை சந்தித்துள்ளதாக
அறியமுடிகின்றது.
மேலும்,
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன யாழ்ப்பாணத்தில்
இருப்பதாகவும் அவர் மீள அங்கிருந்து திரும்பியவுடன்
இது தொடர்பில்
தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment