நீதிமன்ற வழக்குகளையும்
அவசரகால சட்ட ஏற்பாடுகளையும்
மதிக்காத கல்முனை உண்ணாவிரதம்

கல்முனை உப தமிழ்  பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கர தேரர் தலைமையில் கல்முனை முருகன் ஆலய பிரதம குரு சச்சிதனந்த குருக்கள் உள்ளிட்ட சிலர்  குறித்த உப செயலகம் முன்பாக  உண்ணா  விரதம் ஆரம்பித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை உப பிரதேச செயலகம் பற்றிய வழக்கு இருக்கும்போது நீதி மன்றத் தீர்ப்பை மதியாது உண்ணவிரதம் இருப்பதற்கு நாட்டில் அனுமதித்திருப்பதன் அர்த்தம் என்ன

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம்

வழக்குஇல: 300/18

அடுத்த தவணை-

26.07.2019 மறுமொழி அளிக்கும் இறுதி நாள்.

23.08.2019 எதிர் கருத்து சமர்ப்பிக்கும் நாள். 26.09.2019 ஏதிர் வாதம் புரியும் நாள்.

நிலைமை இப்படி இருக்கையில் அப்பாவி மக்களை மடையர்களாக்கி அரசியல் செய்யாது, நாட்டின் சட்டத்தை மதித்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குவதே நல்லவர்களது செயலாகும்.

இது மாத்திரமல்ல தற்போது நாட்டில் அவசரகால சட்ட ஏற்பாடு  அமுலில் இருக்கும்போது பொது மக்கள் பொது இடத்தில் ஒன்று கூடுவதற்கும் டயர் எரித்து ஆர்பாட்டம் செய்யவும் முடியுமா? சட்டம் எப்படியெல்லாம் இனம் மதம் பார்த்து செயற்படுகிறது என்று மக்கள் கவலை வெளியிட்டு இது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

அவசரகால தடைச்சட்டம் அமுலில் இருக்கும்போது பொதுமக்கள் கையில் அதிகாரம் என்றால் இது அரசுக்கே கேவலமாக தெரியவில்லையோ  எனவும் கேள்வி எழுப்பி கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்ட ஏற்பாடு முஸ்லிம்களுக்கு மட்டுமா? அல்லது சகல இனங்களுக்குமா? இது குறித்து  அரசு தெளிவு படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (ஜு)
"எல்லா உயிர்களும் சுகமாக வாழ பிரார்த்திப்போமாக"

(போதி மாதவனின் போதனை)








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top