மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயல்
-அமைச்சர் மங்கள டுவிட்


மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காவி அணிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரை நலம் விசாரிக்க உண்ணா விரதம் நடந்த இடத்துக்கு சென்றமை, இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் எத்தனிப்பதாக தெரி கின்றது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரரை நலம் விசாரிப்பதற்காக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சென்றமை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை இட்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாப்பரசர் மற்றும் வத்திக்கான் செய்திச் சேவைக்கு மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இந்த செயலை அவதானிக்குமாறும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

         
Malcolm Ranjith fanning the flames of hatred and communalism by visiting fasting robed MP Rathana. TAKE NOTE! #lka

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top