நாட்டு மக்களிடம் 
மஹிந்த முன்வைத்துள்ள கோரிக்கை



நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவு வழங்கும் வகையிலான போராட்டத்தில் ஈடுபடும் நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் மும்மொழிகளிலும் அவர் இந்த கோரிக்கையை இன்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும்,

ரதன தேரரின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து மக்களும், கௌரவ பௌத்த மஹா சங்கத்துக்கு உயரிய மரியாதை செலுத்தும் வகையில் வன்முறைகளை கையில் எடுக்காமல், முக்கிய பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய நடைபவனி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      

ரதன தேரரின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து மக்களும், கௌரவ பௌத்த மஹா சங்கத்துக்கு உயரிய மரியாதை செலுத்தும் வகையில் வன்முறைகளை கையில் எடுக்காமல், முக்கிய பொறுப்புக்களை உனர்ந்து செயல்படுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top