மட்டக்களப்பு பல்கலைக்கழகம்
எனக்கு மட்டும் சொந்தமானது!
அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்
அளவிற்கு சட்டத்தில் இடமில்லை
ஹிஸ்புல்லாஹ் அதிரடி
சர்ச்சைக்குரிய
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்
அளவிற்கு சட்டத்தில்
இடமில்லை என
முன்னாள் கிழக்கு
மாகாண ஆளுநர்
ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
சிங்கள
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த
பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு எடுத்து கொள்வது தொடர்பில்
தன்னுடன் கலந்துரையாடல்
மேற்கொள்ள வேண்டும்.
அது
தொடர்பில் கலந்துரையாடல்
மேற்கொள்வதற்கு தான் தயார். தனியார் நிறுவனத்தை
எப்படி அரசாங்கத்தினால்
எடுத்துக்கொள்ள முடியும்?
நாட்டிலுள்ள
சட்டத்திற்கமைய அவ்வாறு அரசாங்கத்திற்கு எடுக்க முடியாது.
இன்னமும் இதனை
தனியார் பல்கலைக்கழகமாக
வர்த்தமானியில் பதிந்துக்கொள்ளவில்லை.
இவ்வாறான
நிலையில் தனியார்
நிறுவனம் ஒன்றை
எப்படி அரசாங்கத்திற்கு
எடுத்துக்கொள்ள முடியும். அப்படியே எடுக்க வேண்டும்
என்றால் நாடாளுமன்றத்தில்
யோசனை ஒன்றை
சமர்ப்பிக்க வேண்டும்.
நாடாளுமன்ற
உறுப்பினர் ரத்ன தேரர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை
பார்வையிட வேண்டும்
என்றால் என்னிடம்
கேட்க வேண்டும்.
கேட்டால்
பார்வையிட அனுமதி
வழங்கப்படும். பலவந்தமாக அதனை பார்வையிட முடியாது
என ஹிஸ்புல்லாஹ்
மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment