உண்ணாவிரதக்காரர்
ஒருவர்
போராட்டத்தை
முன்னெடுக்கப்போவதாக அறிவிப்பு
ஞானசாரதேரரின் முயற்சி தோல்வி!
கல்முனை
மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் தியாகராஜன் தான் தொடர்ந்தும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை
முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஏனைய நால்வரும் தாமும் நீராகாரம் மட்டும் அருந்தி
தொடர்ந்தும் இதே இடத்தில் தமது போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
கல்முனை
உப பிரதேச
செயலகத்தை தரமுயர்த்தக்
கோரி 6 நாட்களாக
உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் போராட்டக் காரர்களை
இன்றைய தினம்
வடக்கு அரசியல்
பிரமுகர்கள் மற்றும் பொதுபல சேனா அமைப்பின்
பொது செயலாளர்
கலகொட அத்தே
ஞானசார தேரர்
ஆகியோர் நேரடியாக
சென்று பார்வையிட்டதோடு
ஒரு மாத
காலத்திற்குள் தீர்வு பெற்றுத் தரப்படும் என
ஞானசார தேரர்
கூறியதையடுத்து தற்போது போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும்
கல்முனை மாநகரசபை
உறுப்பினர் சந்திரசேகரன் தியாகராஜன் தான் தொடர்ந்தும்
இந்த உண்ணாவிரத
போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஏனைய நால்வரும்
தாமும் நீராகாரம்
மட்டும் அருந்தி
தொடர்ந்தும் இதே இடத்தில் தமது போராட்டத்தை
தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை
நேற்றைய தினம்
அமைச்சர் மனோகணேசன்
மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும்
போராட்டக்களத்திற்கு அரசாங்கத்தின் செய்தி
ஒன்றை எடுத்துச்
சென்றிருந்தனர்.
0 comments:
Post a Comment