ஹிஸ்புல்லா, அசாத் சாலி பதவி விலகல்!
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி
ஹிஸ்புல்லா
மற்றும் அசாத்
சாலி தமது
பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த நிலையில் அவர்கள்
பதவி விலகியதை
உறுதிப்படுத்தி அரசாங்கத்தினால் வர்த்தமானி
அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த
ஏப்ரல் மாதம்
21ஆம் திகதி
நாட்டில் இடம்பெற்ற
பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் மற்றும்
ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர்
பதவி நீக்கம்
செய்யப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகள்
பலதரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில்
குறித்த மூவரும்
பதவி நீக்கம்
செய்யப்பட வேண்டும்
என வலியுறுத்தி
கண்டியில் அதுரலிய
ரத்ன தேரர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த
நிலையில் ஆளுநர்களான
அஸாத் சாலி
மற்றும் ஹிஸ்புல்லா
ஆகியோரின் இராஜினாமா
கடிதங்களை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார்.
இதனை
அடுத்து தனது
உண்ணாவிரத போராட்டத்தினை
ரத்ன தேரர்
கைவிட்டிருந்தார்.
எனினும்
குறித்த சம்பவத்தால்
ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்
மற்றும் பிரதி
அமைச்சர்களும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment