நாடு எத்திசையை நோக்கிப் போகின்றது?
முஸ்லிம் ஊடகவியலாளர்கள்
மீதும் சந்தேகப்பார்வை!

இன்று (01.6.2019 முப.3மணியளவில் கொழும்பு 7 விக்டோரிய பார்க்  முன்றலில் ஓர் ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்விடத்தில் நானும் சென்றிருந்தேன். அங்கு நடைபெற்றுக் கொண்ருக்கும் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி பிரதமா் மற்றும் அரசுக்கும் விரோதமானது. அங்கு அமைச்சா் றிசாத் பதியுத்தீன், ஆளுனா்களான அசாத் சாலி, கிஸ்புல்லா பா. முஜிபு ரகுமான் ஆகியோர்கள் கொண்ட போஸ்டா்கள் மற்றும் பிளேகாட் உயாத்திக் கொண்டே இவா்களை பதவியிலிருந்து அகற்றுமாறு ஜனாதிபதி பிரதமா் எதிராகவே கோசமிட்டிருந்தார்கள்.

.எனது சக ஊடக நண்பா்களும் இருந்தார்கள். இது அரச ஊடகங்களில் இச் செய்திகளை பிரசுரிக்க மாட்டார்கள் என ஒரு இரு புகைப்படம் எடுத்துவிட்டு திரும்புகையில் அங்கு ஆர்பாட்டக்காரா்கள் ஒரு சிலா் பாதுகாப்புப் படையினரிடம் ஏதோ பிழையான தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.

 அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி இருவா் . என்னையும் எனது ஊடக அடையாள அட்டை தேசிய அடையாள அட்டை மற்றும் எனது ஊடக மைக். கமராக எல்லாவற்றையும் பரிசோதனை செய்தார்கள். எனது ஊடக அடையாள அட்டையும் இலக்கத்தினையும் பதிவு செய்தார்கள்.

நான் அவரிடம் சொன்னேன் முஸ்லிம் ஊடகவியலாளாராக இருந்தால் ஏன் சந்தேகப்படுகின்றீா்கள். எனது சக ஊடக நண்பாகள் அனைவருக்கும் என்னை தெரியும் 20 வருடமாக கொழும்பில் ஊடக தொழில் செய்து வருகின்றேன். இநத அரச திணைக்கள ஊடகஅடையாள அட்டையில் பின்புறத்தில் என்ன எழுதப்பட்டு்ளளது. எனப் பாருங்கள். இவ்வாறு நீங்கள் எங்களை சந்தேகத்தோடு பார்க்கும்போது இந்த தொழிலை நாங்கள் சுதந்திரமாகச் செய்ய முடியாது. ? அல்லது எங்களை இந்த நாட்டில் ்இருந்து வெளியேற்றி வெளிநாடுகளுக்குச் சென்று தான் நாங்கள் தொழில் செய்ய வேண்டும் .
அதற்கு பொலிஸ் அதிகாரி இல்லை. இல்லை நீங்கள் இடை நடுவில் சென்றதால் தான் அவா்கள் உங்களை சந்தேகம் கொள்கின்றார்கள். அது தான் உங்களை நான் விசாரித்தோம். நாட்டின் நிலைமை உங்களுக்குத் தெரியும் தானே. –

அவ்வாறானால் உங்கள் பொலிஸ் நிலையத்தில் சேவை செய்யும் முஸ்லிம் அதிகாரிகள் இருந்தால் அவரையும் நீங்கள் இவ்வாறுதான் சந்தேகக் கொண் டு பார்ப்பீர்களா? எனக் கேட்டுவிட்டு வந்தேன் நான் உண்மையான ஊடகவியலாளா் - ஆனால் அரச ஊடகங்களில் இங்கு அரசுக்கு எதிராக நடைபெறும் நிகழ்வுகளை செய்தியில் பிரசுரிக்க மாட்டார்கள் அதற்காகவே நான் இடை நடுவில் விட்டுவிட்டு வந்தேன் எனத் தெரிவித்தேன்.
-          Ashraff A Samad
ஊடகவியலாளர்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top