சட்டத்தரணி
சறூக் & நுஸ்ரா தம்பதியினருக்கு
இந்த ரமழானுடைய காலத்தில்
இப்தாரும் சஹர் உணவும்
அதிகமாக பாதையிலேயே கழிகிறது.
தெல்தெனிய நீதிமன்றத்திற்கு
வருகை தந்திருந்த
சட்டத்தரணி சரூக் தம்பதியினர் எனது அழைப்பை
ஏற்று மடவளை
வந்தனர்.
இருவரும் (சட்டத்தரணி
சறூக் & நுஸ்ரா தம்பதியினர் ) நாடளாவிய
ரீதியில் அவசரகால
சட்டத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி
கிடைக்க தியாக
உணர்வோடு ஓய்வின்றி
அயராது உழைப்பதை
அனைவரும் அறிந்த
செய்திதான்.
இந்த ரமழானுடைய
காலத்தில் அதிகமாக
இப்தாரும் சஹர்
உணவும் பாதையிலேயே
கழிகிறது. அல்லாஹ்
அவர்களை பொருந்திக்
கொள்வானாக.
சுமார் 1.1/2 (ஒன்றரை)
மணித்தியாலங்கள் சமகால நிகழ்வுகள்கள் பற்றியும் அதனுடன்
சம்பந்தப்பட்ட சட்ட சிக்கல்கள் பற்றியும் பேசினோம்.
அவசரகால சட்டம்
சம்பந்தமான பல தெளிவுகள் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!
இருவருக்கும், மக்கள்
நலன் நாடி
செய்யும் பணியில்
தொடர்ந்தும் காரியமாற்ற மன உறுதியையும் வாதிடும்
திறமையையும் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வில் பரக்கத்தையும்
இன்னும் சகலவிதமான
நன்மைகளையும் கொள்கையில் உறுதியையும் வழங்க ஏக
நாயன் அல்லாஹ்விடத்தில்
துஆச் செய்கிறேன்.
சட்டத்தரணி சறூக் -கொழும்பு 0771884448
சுல்பி
சமீன்.
31-05-2019
0 comments:
Post a Comment