ஞானசார தேரரை ஏன் விடுதலை செய்தேன்!
ஜனாதிபதி மைத்திரி
ஞானசார
தேரர் ஒரு
பௌத்த பிக்கு.
அவரை விடுதலை
செய்யும்படி சிங்கள பௌத்த தலைவர்களும் மகாநாயக்க
தேரர்களும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்கள்.
அத்தோடு,
முஸ்லிம் மதத்
தலைவர்களிடமும் மௌலவிமார்களிடமும் ஞானசார தேரரை விடுதலை
செய்வதைப் பற்றி
அவர்களின் கருத்தை
வினவிய போது
அவர்களும் அத்தேரரை
விடுதலை செய்வதை
எதிர்க்கவில்லை என்பதை என்னிடம் தெரிவித்தார்கள். அதற்கமையவே தேரரை விடுதலை செய்தேன்
என்று ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்திய
ஊடகம் ஒன்றுக்கு
வழங்கிய நேர்காணலிலேயே
அவர் இதை
குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்
கையில்,
தனிப்பட்ட
ரீதியிலும் நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும்
செயற்படும்படியும் அப்படி நடந்து
கொள்ளாவிட்டால் மீண்டும் அவரை கைது செய்ய
நேரிடும் என்பதையும்
அவரிடம் நான்
அறிவுறுத்தியி ருக்கின்றேன்.
அவரின்
விடுதலை மோதல்களுக்கு
வழிவகுக்கக்கூடும் என சிலர்
கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
ஆயினும் மோதல்களைத்
தவிர்த்து சகலரும்
ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே
எமது எதிர்
பார்ப்பாகும்.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதலை
மேற்கொண்ட பயங்கரவாத
அமைப்பினர் உலகின் வேறு நாடுகளுக்கு சென்று
பயிற்சி பெற்றிருப்பதாக
செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
அத்துடன்
இந்த தாக்குதல்களுக்கு
சர்வதேச பயங்கரவாத
அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின்
தலைவர்கள் உரிமைகோரி
இருக்கின்றார்கள்.
அத்தோடு
சர்வதேச பயங்கரவாத
அமைப்புக்களுடன் தாக்குதல் நடத்திய அமைப்புக்கு தொடர்பிருப்பதாக
புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியிருக்கின்றது
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment