முக்கியமான சூழ்நிலையில்
ரணில் -மஹிந்த சந்திப்பு!
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் இன்று (03) காலை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெறுகின்றது.
அமைச்சர்
ரிசாத் பதியுதீன் மற்றும் கிழக்கு, மேல் மாகாண
ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ்,அசாத்சாலி
இருவரையும் பதவிவிலக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கண்டி தலதா
மாளிகையில் உண்ணாவிரதமிருந்துவரும் நிலையில் இந்தசந்திப்பு இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இந்தச்
சந்திப்பில் மஹிந்த தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம ஜயந்த,
உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்
0 comments:
Post a Comment