கல்முனை வடக்கு
உப பிரதேச செயலகம்
உருவாகப்பட்டது சட்டவிரோதமானது
உருவாகப்பட்டது சட்டவிரோதமானது
அக்கரைப்பற்று
இளஞர்களின் உதவியுடன்
மேல் முறையீட்டு
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் சட்ட விரோதமான முறையில் உருவாகப்பட்டது என தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் அக்கரைப்பற்று இளஞர்களின் உதவியுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்குஇல: 300/18
அடுத்த தவணை-
26.07.2019 மறுமொழி அளிக்கும் இறுதி நாள்.
23.08.2019 எதிர் கருத்து சமர்ப்பிக்கும் நாள்.
26.09.2019 ஏதிர் வாதம்
புரியும் நாள்.
அரசாங்கத்தின் எந்த அங்கீகாரமுமின்றி 30 வருடங்களுக்கு முன் சட்டரீதியற்ற முறையில் விடுதலைப்புலிகளின் பலாத்காரமான செயல்பாட்டில் பிஸ்டல் முனையில் உருவாக்கப்பட்ட கல்முனை வடக்கு
உப பிரதேச செயலகத்தை 30 வருடங்களுக்குப் பின் தரமுயர்த்தக் கோருவது என்பது
சட்டரீதியற்ற முறையில் தகாத உறவில் 30 வருடங்களுக்கு முன் பெற்றெடுத்த ஒரு
குழந்தைக்கு 30 வருடங்களுக்கு பின் சட்டரீதியாக பெயர் வைக்க முனைவது போன்றதான்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை .தரமுயர்த்தக் கோரி எடுக்கப்படும்
போராட்டமாகும்
1989 ஆம் ஆண்டு எந்தவிதமான சட்ட
வரைவுகளுக்கும் உட்படுத்தப்படாமல் அன்றிருந்த பிரதேச செயலாளரின் தலையில் பிஸ்டலை
குறி வைத்து ஆயுதமுனையில் பிரிக்கப்பட்டதுதான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாகும்.
இப்படி
சட்டரீதியற்ற முறையில் பொது நிருவாக அமைச்சின் அங்கீகாரமின்றி தொடர்ந்து இயங்கியதுதான்
இந்த கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாகும்.
இப்படி
அரசாங்கத்தினதும் அமைச்சரவையினதும் எதுவித அங்கீகாரமுமின்றி இனத்துவரீதியிலும், நிலத்
தொடர்பற்ற ரீதியிலும் சட்ட விரோதமாக ஆயுத முனையில்
30 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு உப பிரதேச செயலக அலுவலகத்திற்கு இன்று அதாவது
30 வருடங்களுக்குப் பின் சட்டரீதியான அங்கீகாரம் கேட்பது எந்த வகையில் நியாயம்? இதற்கு
சரியான தீர்வு கிடைக்கவேண்டும் எனக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த
வழக்கை விசாரணை செய்வதற்கு நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜு)
0 comments:
Post a Comment