இனத்துவரீதியிலும்,நிலத்
தொடர்பற்ற ரீதியிலும்
உருவாக்கப்பட்ட
எத்தனிக்கும்
பிரதேச செயலகத்தை
தடை செய்யக்கோரி
கல்முனை மக்கள்
மேற்கொள்ளும் சத்தியாகிரகம்
அரசாங்கத்தின்
எந்த அங்கீகாரமுமின்றி 30 வருடங்களுக்கு
முன் சட்டரீதியற்ற
முறையில் விடுதலைப்புலிகளின்
பலாத்காரமான செயல்பாட்டில் பிஸ்டல் முனையில்
உருவாக்கப்பட்ட கல்முனை வடக்கு உப பிரதேச
செயலகத்தை 30 வருடங்களுக்குப் பின் தரமுயர்த்தக் கோருவது
என்பது சட்டரீதியற்ற
முறையில் தகாத
உறவில் 30 வருடங்களுக்கு
முன் பெற்றெடுத்த
ஒரு குழந்தைக்கு
30 வருடங்களுக்கு பின் சட்டரீதியாக பெயர் வைக்க
முனைவது போன்றதான்
கல்முனை வடக்கு
உப பிரதேச
செயலகத்தை .தரமுயர்த்தக் கோரி எடுக்கப்படும் போராட்டமாகும்
1989 ஆம்
ஆண்டு எந்தவிதமான
சட்ட வரைவுகளுக்கும்
உட்படுத்தப்படாமல் அன்றிருந்த பிரதேச
செயலாளரின் தலையில் பிஸ்டலை குறி வைத்து
ஆயுதமுனையில் பிரிக்கப்பட்டதுதான் கல்முனை
வடக்கு உப
பிரதேச செயலகமாகும்.
இப்படி
சட்டரீதியற்ற முறையில் பொது நிருவாக அமைச்சின்
அங்கீகாரமின்றி தொடர்ந்து இயங்கியதுதான் இந்த கல்முனை வடக்கு
உப பிரதேச
செயலகமாகும்.
இப்படி
அரசாங்கத்தினதும் அமைச்சரவையினதும் எதுவித அங்கீகாரமுமின்றி இனத்துவரீதியிலும், நிலத் தொடர்பற்ற ரீதியிலும் சட்ட விரோதமாக ஆயுத
முனையில் 30 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு
உப பிரதேச
செயலக அலுவலகத்திற்கு
இன்று அதாவது
30 வருடங்களுக்குப் பின் சட்டரீதியான
அங்கீகாரம் கேட்பது எந்த வகையில் நியாயம்?
இவ்வாறு
தெரிவித்தும் கல்முனையில் இருக்க வேண்டியது ஒரு பிரதேச செயலகம் மாத்திரமே எனத் தெரிவித்து
முஸ்லிம்களும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின்
சட்ட திட்டங்களுக்கு
முரணாக செயற்படும்
கல்முனை வடக்கு
உப பிரதேச
செயலகத்தை மூடுமாறு
அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழர்களின்
போராட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கல்முனை
தலைமைப் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இரு
தரப்பினருக்கு இடையில் நடைபெறும் போராட்டம் காரணமாக
கல்முனையில் குழப்பகரமான சம்பவங்கள் இடம்பெறலாம் என
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன்
காரணமாக கல்முனையில்
பலத்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கல்முனை
மாநகர மேயர்
சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,
முன்னாள் மாகாணசபை
உறுப்பினகளான சட்டத்தரணி ஆரிப்சம்சுடீன் ஏ.எல்.தவம்,காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர்
உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி ரசாக் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான
அமீர்,நாவாஸ் உமர் அலி,பைறோஸ்,சத்தார்,நிசார், முன்னள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.கபூர்,
போன்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைதீவு
பிரதேச சபை பிரதி தவிசாளர் உட்பட சாய்ந்தமருது,மருதமுனை,நற்பிட்டிமுனை மக்கள் அனைவரும்
கல்முனை சத்தியாகிரக போராட்டத்தில் இணைந்து கொண்டனர்
கல்முனை
மக்களின் சத்தியாகிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாய்ந்தமருது-மாளிகைக்காடு
யூத் லீடர்ஸ் போரத்தினரும் இணைந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment