மக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின்
பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது



தீவிரவாத கருத்துக்களை பரப்பும் வகையில் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில்மக்தாப்கல்வி (‘Maktab’) த்திட்டம் கற்பிக்கப்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அகில இலங்கை ஜமியத்துல உலமா அடியோடு நிராகரித்துள்ளது.
பள்ளிவாசல்களில் நடைபெறும் மக்தாப் வகுப்புக்கள் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் உருவாவதற்கு பங்களிப்பு செய்வதாக அண்மையில் பொதுபலசேனா ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையிலேயே அகில இலங்கை ஜமியத்துல உலமா இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள அகில இலங்கை ஜமியத்துல உலமா ,

மக்தாப் என்றால் படிக்கும் இடம் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2010 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அமைச்சு பள்ளிவாசல்களில் நடைபெற்றுவரும் மதவகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டது. இவை மக்தாப் வகுப்புக்கள் என்று அழைக்கப்பட்டன.அத்துடன் பாடத்திட்டத்துக்கான புத்தகங்களும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வழங்கப்பட்டன.

கடந்த பல வருடங்களாக முஸ்லிம்கள் நாட்டின் சிறந்த குடிமக்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வரவேண்டுமெனவே பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படுகின்றன.

அத்துடன் இந்த கற்பித்தலுக்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணம் ஆசிரியர்களின் சம்பளம் வழங்கவும் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன.வேறு தேவைகளுக்காக இந்தப்பணம் பயன்படுத்தப்படுவதில்லை.

எனவே நாட்டில் நிலவும் அமைதியை பாதிக்கும் வகையில் தவறான அறிக்கைகளை வெளிaிடக்கூடாது எனவும் அகில இலங்கை ஜமியத்துல உலமா மேலும் தெரிவித்துள்ளது.



19.06.2019
மக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை 
ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது

இலங்கை வாழ் முஸ்லிம் சிறார்களின் நல்லொழுக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும் வழிவகுக்கக் கூடிய மக்தப் கல்வியை பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் துணை போகக் கூடியதாக சித்தரித்து பொதுபல சேன அமைப்பினால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. உண்மைக்குப் புறம்பான இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் விடயத்தில் கவனமாக இருக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.

முஸ்லிம்கள் இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள். வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சிறார்களின் நல்லொழுக்கத்திற்கும், நற்பண்புகளுக்கும் வழிவகுக்கக் கூடிய, அவர்களை நாட்டின் நற்பிரஜைகளாக வாழச் செய்யக் கூடிய கல்வி மஸ்ஜித்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய வரலாற்றுப் பின்புலம் கொண்ட மஸ்ஜித் கல்விக் கூடங்களுக்கான பாடத்திட்ட முறையை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடந்த 2010ஆண்டு அறிமுகம் செய்தது. குறித்த பாடத்திட்டத்தைத் தழுவிய பாட நூற்களை அமைத்து அதற்குத் தேவையான ஒழுங்குவிதிகளையும் அறிமுகம் செய்து அந்தப் பள்ளிக் கூடங்களை மக்தப் எனும் பெயரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புனரமைப்புச் செய்தது. அதனை ஒவ்வொரு மஸ்ஜிதும் தமது மேற்பார்வையின் கீழ் நடாத்தும் வண்ணம் ஜம்இய்யா வழிகாட்டி வருகின்றது.

மக்தப் என்பது எழுதும் இடம், படிக்கும் இடம் எனும் கருத்துக்களைக் கொடுக்கும் அரபுச் சொல்லாகும். குறித்த செயற்பாடுகள் அங்கு நடைபெறுவதால் அச்சொல் வழங்கப்படுகிறது.

மக்தப் மாணவர்களிடமிருந்து பெறப்படும் மாதாந்தக் கட்டணங்கள் ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவு மற்றும் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைளுக்கே உபயோகிக்கப்படுகின்றன. அதனை அவ்வந்த மஸ்ஜித்களின் மக்தபுக்கான பிரதிநிதிகள் பொறுப்பேற்றுச் செய்கின்றனர். அது வல்லாமல் ஜம்இய்யாவிற்கோ அல்லது ஜம்இய்யா சார்ந்த நடவடிக்கைகளு;ககோ அது சொந்தமானதல்ல என்பதையும் ஜம்இய்யா பொறுப்புடன் கூறிக்கொள்கின்றது.

எனவே எவ்வித உண்மையும் இல்லாத இனக் குரோதங்களை தூண்டி விடக் கூடிய பொய்யான பிரசாரங்களை செய்து இந்நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்காமல் நடந்து கொள்ளுமாறு ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர்
உதவிச் செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top