குருநாகல் வைத்தியர் ஷாபி குடும்பத்தவர்களின்
 இன்றைய  நிலை !

எனது கணவர் அப்பாவி என்று வெளியில் வந்தாலும்

 நிலைமை முன்னரைப் போல் இருக்கும் என்று கூற முடியாது.

ஊடகங்கள் எம்மை கொன்று விட்டன.

என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

எமது பிள்ளைகள்  மூவரும் பாடசாலைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 
   
             கவலை வெளியிட்டுள்ள வைத்தியர் இமாரா ஷாபி



குருநாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பான செய்திகள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இவருடைய குடும்பம் பற்றி கவலையான தகவல்கள் வெளியாகி உள்ளன.

எந்தக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாத நிலையில் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி பற்றி வெளிவரும் இட்டுக்கட்டும் பொய் செய்திகளால் இவருடைய குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவருடைய மனைவி வைத்தியர் இமாரா ஷாபி. இவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரகவியல் வைத்தியராக இருக்கின்றார்.

தனது கணவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து வேலைக்குச் செல்ல முடியாமல் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

அத்துடன் இவரது பிள்ளைகளான மூவரும் பாடசாலைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனராம். அவர்கள் 10, 13 மற்றும் 15 வயதுடையவர்கள்.

எமது வீடுகளில் இருந்து நாம் அகதிகளைப் போல் வெளியே நிற்க வேண்டியுள்ளது. ஏனெனில் எமது வீடு இனிமேல் எமக்கு பாதுகாப்பாக இல்லை என்று வைத்தியர் இமாரா ஷாபி கூறியுள்ளார்.

தனது கணவர் வெறுமனே விடுதலை செய்யப்படுவதை தான் விரும்பவில்லை. அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் விசாரணையே எனக்கு வேண்டும் என்றும் வைத்தியர் இமாரா ஷாபி கூறியுள்ளார்.

மேலும், "எனக்கு இப்போதும் சரியாகத் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை. இது எமது பிள்ளைகளையும் பெரிதாகப் பாதிக்கிறது.எனது குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. நிலைமை சாதாரணத்துக்கு திரும்பி முன்னரைப் போல இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

எனது கணவர் அப்பாவி என்று வெளியில் வந்தாலும் நிலைமை முன்னரைப் போல் இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் ஊடகங்கள் எம்மை கொன்று விட்டன என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top