முஸ்லிம் திருமண சட்டத்தை
மாற்றியமைப்போம்!
நான்கு திருமணங்களை செய்து
கொள்ள சிலருக்கு சட்டத்தில் காணப்படும் சந்தர்ப்பமும் ரத்து செய்யப்படும்
- மஹிந்த உறுதி
தேசிய சுதந்திர தின
நிகழ்வுகளின் போது ஓர் ஆளுனர்
இரண்டு மனைவியரை நிகழ்விற்கு
அழைத்து வந்திருந்ததையும்
சுட்டிக்காட்டினார்
முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றியமைப்பதுடன் குறைந்த வயதுடைய சிறுமியரை திருமணம் செய்யவும், நான்கு
திருமணங்களை செய்து கொள்ளவும் சிலருக்கு சட்டத்தில் காணப்படும் சந்தர்ப்பம் ரத்து
செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மாவனல்ல
பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
குறைந்த
வயதுடைய சிறுமியரை திருமணம் செய்யவும், நான்கு
திருமணங்களை செய்து கொள்ளவும் சிலருக்கு சட்டத்தில் காணப்படும் சந்தர்ப்பம் ரத்து
செய்யப்படும்.
அனைத்து
தரப்பினரும் நாட்டில் ஒரே விதமான சட்டங்கள் அமுல்படுத்தப்படும்.
தேசிய
சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஓர் ஆளுனர் (அசாத்சாலி) தனது இரண்டு மனைவியரை
அரசாங்க நிகழ்விற்கு அழைத்து வந்திருந்தார்.
எத்தனை
மனைவியர் இருந்தாலும் அரசாங்க நிகழ்வு ஒன்றில் அவ்வாறு மனைவியரை அழைத்துவர
இடமளிக்கப்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment