கடலில் கைப்பற்றிய சுமார் 600 கோடி ரூபா
மதிப்புள்ள போதைப்பொருள்
தென்
கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமையன்று (29)
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நேற்று
(05) காலை திக்ஓவிட்ட
மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இது
கடலிலோ அல்லது
நிலப்பரப்பிலோ கைப்பற்றப்பட்ட மிக பெருந்தொகையான போதைப்பொருள்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்
தகவலுக்கு அமைய
இலங்கை கடற்படையினரால்
குறித்த போதைப்பொருளுடன்
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு
மாதகாலமாக முன்னெடுக்கப்பட்ட
நடவடிக்கையின்போது, இரண்டு கட்டங்களாக
இப்போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த
நடவடிக்கையின்போது 397 பைக்கற்றுகளில் பொதி
செய்யப்பட்டிருந்த 400 கிலோகிராம் ஹெரோயினும்
100 பைக்கற்றுகளில் பொதி செய்யப்பட்டிருந்த
100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இப்போதைப்பொருளின்
பெறுமதி சுமார்
600 கோடி ரூபா
என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின்போது
இப்போதைப்பொருளை கொண்டு வந்த மற்றும் கொள்வனவு
செய்த சந்தேகநபர்கள்
15 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள்
மற்றும் கைது
செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், ஆரம்பக்கட்ட
விசாரணைகளை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த
வருடம் 762 கிலோகிராம் ஹெரோயின், 3,653
கேரள கஞ்சா,
03 கிலோகிராம் போதைப்பொருள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
0 comments:
Post a Comment