சாய்ந்தமருதில் இடம்பெற்ற 
தேசிய அரசியலில் அம்பாறை மாவட்ட
எதிர்கால அரசியல் புரட்சி தொடர்பான
மாபெரும் பொதுக்கூட்டம்

சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனை ஏற்பாட்டில்"தேசிய அரசியலில் அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் புரட்சி தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம்" நேற்று (08) சாய்ந்தமருது ஜும்ஆபள்ளிவாசல் முன்பாக சந்தைக் கட்டத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, ஓய்வுபெற்ற சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் டாக்டர். ஏ உதுமாலெப்பை உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள் அத்துடன் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருது - மாளிகைக்காடு மக்கள் பணிமனையினால் ஐந்து அம்சங்கள் அடங்கிய பிரகடனம் வெளியிடப்பட்டது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top