தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம்
எவ்வித கொடுப்பனவும்
அறவிடப்பட மாட்டாது
மட்டக்களப்பு
பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய
நிலையம் என்பவற்றில்
அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம்
இருந்து எவ்வித
கொடுப்பனவும் அறவிடப்பட மாட்டாது என இராணுவ
தளபதி சவேந்திர
சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா
தடுப்பு முகாமில்
உள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா
மற்றும் இத்தாலியில்
இருந்து இன்று
(10) காலை வருகை
தந்த 181 பேர்
கொரோனா வைரஸ்
தடுப்பு முகாமான
மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள்
179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா
தடுப்பு முகாமில்
உள்ளவர்களுக்கு தேவையான உணவை பெற்றுக் கொள்வதற்கு
பணம் செலுத்த
வேண்டி உள்ளதுடன்
அதற்காக 14 நாட்களுக்கு மூன்று வேளை உணவை
பெற்றுக் கொள்ள
7500 ரூபா பணம்
செலுத்த வேண்டும்
என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு
அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் தங்களது எதிர்ப்பை
தெரிவித்து அமைதியற்ற விதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும்
தடுப்பு முகாமில்
உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறவிடப்பட
மாட்டாது என
இராணுவ தளபதி
சவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment