உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி- 2015
ஆப்கானிஸ்தானுடனான
போட்டியில் இலங்கை
13ஓவர்களில்4 விக்கெட்டுக்களை
இழந்து தடுமாறுகின்றது.
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்,
இலங்கை அணிகள்
இன்று ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதலில்
துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடி
233 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன்படி பதிலுக்கு
துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று
முன்னர் வரை
13 ஓவர்கள் நிறைவில் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
இரு
அணிகளும் தங்களது
முதல் ஆட்டத்தில்
தோற்றுள்ளன. ஆசிய நாடுகளில் வலுவான கிரிக்கெட்
அணியான இலங்கை,
தனது தொடக்க
ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 98 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதேபோல,
வங்கதேச அணிக்கு
எதிராக தொடக்க
ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியிருந்தாலும்
பந்து வீச்சில்
ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தோல்வியைத்
தழுவும் அணி
நாக்-அவுட்
சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கடினமாகிவிடும் என்பதால்
இரு அணிகளும்
கவனமாக ஆடும்.
இலங்கை
அணியின் கேப்டன்
ஏஞ்சலோ மேத்யூஸ்
கூறுகையில், "ஆப்கானிஸ்தானுடன் விளையாடினாலும் சரி, ஆஸ்திரேலியாவுடன் விளையாடினாலும் சரி, ஒவ்வோர் ஆட்டமும்
எங்களுக்கு முக்கியமானது. ஒவ்வோர் ஆட்டத்தையும் நாங்கள்
கவனமாக எதிர்கொள்கிறோம்.
ஆப்கானிஸ்தான்
அணியை சாதாரணமாக
எடுத்துக்கொள்ளக் கூடாது. வளர்ந்து வரும் அந்த
அணிக்கு இழப்பதற்கு
என்று எதுவும்
கிடையாது' என்று
தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment