உலகக் கிண்ணக் கிரிக்கெட் -2015
வங்க தேச அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் தொடரின் லீக்
ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான்-வங்கதேச அணிகள் இன்று
மோதுகின்றன.
இதில் நாணயச் சுழற்சியில்
வென்ற வங்கதேச
அணி 'துடுப்பாட்டத்தை
தேர்வு செய்துள்ளது. "ஏ'
பிரிவில் இடம்பெற்றுள்ள
இரு அணிகளும்
மோதும் இந்த
ஆட்டம், ஆஸ்திரேலியாவின்
கான்பெரா மைதானத்தில்
நடக்கிறது.
வங்க
தேச அணியின்
அனாமுல் ஹக் 29 ஓட்டங்களுடனும் தமீம் இக்பால் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்துள்ளனர். 21 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆண்டி மோல்ஸ்
கூறுகையில், "நாங்கள் அமைதியாக
சரியான நேரத்தில்,
சரியான முடிவுகளை
எடுத்தால் வங்கதேச
அணிக்கு கடும்
சவால் அளிக்க
முடியும்' என்று
தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்
அணியை பொறுத்த
வரை அந்த
அணியின் ஓட்டக்
குவிப்பானது, நவ்ரோஸ் மங்கள் மற்றும்
மிடில் ஆர்டர்
பேட்ஸ்மேன்களான ஆஸ்கார் ஸ்டனிக்சாய், சமியுல்லா ஷேன்வாரி,
கேப்டன் முகமது
நபி ஆகியோரை
சார்ந்தே உள்ளது.
இதேபோல,
வங்கதேச அணி
தங்களது நாட்டில்
நடந்த ஆட்டத்தில்
ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த
உலகக் கிண்ணத்
தொடருக்குள் நுழைந்துள்ளது.
0 comments:
Post a Comment