பரவசத்துக்காக 30 நோயாளிகளை
கொலை செய்த ஆண் தாதி
வாழ்நாள் சிறைத்தண்டனை
பெற்றார்
ஜேர்மனியில்
சம்பவம்
பரவசத்துக்காக
30 நோயாளிகளை கொலை செய்த ஆண் தாதி ஒருவருக்கு,
வாழ்நாள் சிறைத்தண்டனை
விதித்து ஜெர்மனி
நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஜெர்மனியில்
டெல்மென்ஹாஸ்ட் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண்
தாதியாக 2003-2005 கால கட்டத்தில்
பணியாற்றியவர், நீல்ஸ் (வயது 30). இவர் அந்த
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வேலை
செய்து வந்தார்.
இவர்,
மருத்துவமனையில் அங்குள்ள டாக்டர்கள் மனம் கவரும் விதத்தில்
திறம்பட பணியாற்றி
வந்துள்ளார். மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை
பிழைக்கவைப்பதற்காக டாக்டர்கள் புத்துயிர்
அளிக்கும் சிகிச்சை
அளிக்கின்ற போது, அதை ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனித்து
வந்திருக்கிறார். இளநிலை டாக்டர்களுக்கு அதில் உதவியும்
செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில்
அவருக்கு தானே
இந்த சிகிச்சையை
செய்ய வேண்டும்
என்ற ஆசை
வந்தது.
அதைத்
தொடர்ந்து அவர்
டாக்டராக மாறி,
நோயாளிகளுக்கு ‘அஜ்மலின்’ என்ற ஊசி
மருந்தை இரகசியமாக
செலுத்தி பரவசம்
அடைந்து வந்திருக்கிறார்.
அந்த நோயாளிகளில்
சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பலர் இறந்தும்
உள்ளனர். இந்த
ஊசி மருந்து,
ஆபத்தானது. டாக்டர்கள் மேற்பார்வையில் தான் செலுத்தப்பட
வேண்டும். கண்டபடி
இந்த ஊசி
மருந்தை செலுத்தினால்,
அது நோயாளியின்
இதயத்துடிப்பு, இரத்த அழுத்தத்தை பாதித்து மரணத்தை
ஏற்படுத்தும். ஆனால் நீல்ஸ், நோயாளிகளுக்கு இரகசியமாக
இந்த ஊசி
மருந்தை செலுத்தி
விடுவாராம். இவ்வாறு அவர் 90 பேருக்கு ஊசி
போட்டு 30 பேரை
கொன்று விட்டார்.
அந்த
மருத்துவமனையில் நோயாளிகள் அடுத்தடுத்து இறந்து வந்ததை
அடுத்து, அவரை
மருத்துவமனை நிர்வாகம் சந்தேகம் கொண்டு கவனித்து
வந்து, அவரது
செயல்பாடுகளைக் கண்டுபிடித்தது.
இதையடுத்து
அவர் கைது
செய்யப்பட்டார். அவர் மீது ஓல்டன்பர்க் மாவட்ட
கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது.
முதலில்
தன் மீதான
குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் மெளனம்
காத்து வந்த அவர் கடைசியில்
கடந்த செப்டம்பர்
மாதம் நீதிமன்றில்
குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
“நான்
உண்மையிலேயே
எனது
செயலுக்காக
வருத்தப்படுகிறேன்”
என அவர்
அப்போது குறிப்பிட்டார்.
மேலும்,
“நோயாளிகளை
கொல்ல
வேண்டும்
என்பது
எனது
நோக்கம்
கிடையாது.
நோயாளிகளுக்கு
ஊசி
போட்டு,
புத்துயிர்
அளிக்கும்
முயற்சியில்
ஈடுபட்டு,
என்
சக
ஊழியர்களை
கவர
வேண்டும்
என்றுதான்
இப்படி
நடந்து
கொண்டேன்”
என கூறினார்.
ஆனால்
அவரது சக
கைதிகளிடம் தான் 50 பேரை ஊசி போட்டு
கொன்று விட்டதாக
அவர் பெருமை
பேசி உள்ளார்.
“50 பேரை கொன்ற
பிறகு நான்
என்னால் இறக்கிறவர்களின்
எண்ணிக்கையை கணக்கிடுவதை நிறுத்தி விட்டேன். இரண்டாம்
உலகப்போருக்கு பின்னர் நான்தான் மிகப்பெரிய தொடர்
கொலைகாரன்” என கூறி உள்ளார். அவர்களும்
நீதிமன்றத்தில் நீல்சுக்கு எதிராக சாட்சியம் அளித்தார்கள்.
முடிவில்,
நீல்சுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
0 comments:
Post a Comment