ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றபோது
திருப்பதியில் இதுவரை
நடக்காத ஒரு சம்பவம்
இந்தியாவுக்கு
உத்தியோகபூர்வப் பயணமாக சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது மனைவியுடன் திருப்பதி
ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம்
செய்தார் அல்லவா?.
இது
ஒரு சாதாரண
செய்திதான். ஆனால், இந்த
செய்திக்குப் பின்னே ஒரு மிகப்பெரிய சம்பவம்
நடந்துள்ளதாம்.
அதாவது,
காலை சுப்ரபாதம்
சிறப்பு தரிசனத்தில்
சுவாமியை தரிசனம்
செய்ய ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
சென்ற போது, ஏழுமலையான் கோயிலின் மூலவர் அறையின்
தங்கக் கதவுகளை
திறக்க கோயில்
ஊழியர்கள் வந்தனராம்.
எப்போதும்
போல பூட்டுக்குள்
சாவியை நுழைத்து
திறக்க முயன்ற
போது, எதிர்பாராத
விதமாக சாவி
உடைந்து பூட்டுக்குள்
சிக்கிக் கொண்டதாம்..
செய்வதறியாது திகைத்த ஊழியர்கள், பொறியாளரை உடனடியாக
வரவழைத்து பூட்டை
உடைத்து கதவை
திறந்தனராம்.
பிறகு
வழக்கம் போல
சுப்ரபாத சேவை
தொடங்கி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுவாமியை தரிசனம்
செய்தார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலவர்
அறைக் கதவின்
பூட்டு உடைந்ததால்
எந்தவித அசம்பாவிதமும்
நடைபெறாது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம்
என்று கோயில் தேவஸ்தானம் சார்பில் கூறப்படுகிறதாம்.
ஆனால்,
இதுவரை கோயில்
பூட்டு உடைக்கப்பட்டதே
இல்லை, இதற்கு
பரிகாரம் செய்தே
ஆக வேண்டும்
என்று மற்றொரு
தரப்பு சொல்கிறதாம்.
0 comments:
Post a Comment