130 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வென்றது

மெல்போர்னில் இன்று நடந்த உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் மோதின.
நாணயற் சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களைக் குவித்தது. இன்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் தவான் இந்திய அணிக்கு ஓட்டங்களைச் சேர்த்தனர். இந்தியா 27.1 ஓவரில் 136 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 46 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஷிகர் தவான் சதம் கடந்தார். தவானுக்கு பக்கபலமாக நின்று ரெகானேவும் நிதனாமாக ஆடினார்.உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தவான் செய்துள்ளார். தோணி சற்று அதிரடியாக ஆடி 18 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா  அணி 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களே எடுத்தது. அணியில் அதிகபட்சமாக பிளிசிஸ் 55 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், முகம்மது சமி, மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும்  கைப்பற்றினர்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய அணி பெறும் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top