உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி- 2015
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அணி 278 ஓட்டங்கள் குவிப்பு
11-வது
உலகக் கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில்
‘பி’ பிரிவில் இடம்
பிடித்துள்ள அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில்நாணயச்
சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை
தேர்வு செய்தது. களம் இறங்கிய ஐக்கிய அரபு எமிரேட் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து
278 ஓட்டங்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அன்வர் 106 ஓட்ங்கள் எடுத்துள்ளார். அம்ஜத்
அலி 45 ஓட்டங்களும், ஜாவீத் 42 ஓட்டங்களும் எடுத்தனர். இதையடுத்து அயர்லாந்து அணிக்கு
279 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து
11 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது.
அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இதுவரை
அதிகாரப்பூர்வமான ஒருநாள் போட்டியில் மோதியதில்லை. இரு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டியில்
நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
0 comments:
Post a Comment