பரபரப்பாக பேசப்பட்ட இந்தியப் பிரதமர் மோடியின் ஆடை
இன்று ஏலத்துக்கு வருகிறது









அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் இந்திய வருகையின்போது இந்தியப் பிரதமர் மோடி அணிந்து இருந்த ஆடை இன்று ஏலத்திற்கு வருகிறது.
இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒபாமாவுடன், ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தங்க இழைகளால் நரேந்திர மோடி என்று ஆங்கிலத்தில் நெய்யப்பட்ட நீல நிற ஆடை ஊடகங்கள் வாயிலாக பிரபலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. மோடியின் ஆட்சி குறித்து பேசி வந்த மக்கள், அவரது ஆடையைப் பற்றி பேசியதும், அவருக்கு எதிராக சில எதிர்மறையான கருத்துக்களும் எழுந்தன.
பிரதமர் மோடி அணிந்திருந்த கோட்டில், தங்க நிறத்தில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று அனைத்து லைனிலும் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அரசியலும் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி அணிந்து இருந்த ஆடையின் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் ( இந்திய நானயத்தில் ) என்று எல்லாம் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் டில்லியில் பிரசாரம் செய்தபோது இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை மற்றும் 9 மாதங்களில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 455 அன்பளிப்புகள் சூரத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது. ஏலத்திலிருந்து வசூலாகும் நிதி கங்கா நதி தூய்மை திட்டத்துக்காக தரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆடையை ஏலம் விட்டு அதனை தூய்மை இந்தியா திட்டத்துக்கு பயன்படுத்துவதன் மூலம், மிக விலை உயர்ந்த ஆடையை மோடி அணிந்திருந்தார் என்று எழுந்த சர்ச்சையின் வலிமை குறையும் என்று இந்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top