இஸ்ரேல் நாட்டில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
கடலில் மூழ்கிய கப்பலில் தங்க புதையல்!
இஸ்ரேல்
நாட்டில் செசெரியா
என்ற இடத்தில்
பழமை வாய்ந்த
துறைமுகம் ஒன்று
உள்ளது. இதன்
அருகே 1000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிகிடந்த கப்பல்
ஒன்றை புதைபொருள்
ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த கப்பலுக்குள் ஏராளமான
தங்க நாணயங்கள்
இருந்தன.இதுவரை
9 கிலோ தங்க
நாணயத்தை கைப்பற்றி
உள்ளனர். மேலும்
ஏராளமான நாணயங்கள்
இருக்கலாம் என கருதி தொடர்ந்து தேடுதல்
வேட்டை நடந்துவருகின்றனர்
என அறிவிக்கப்படுகின்றது.
அரபுநாடுகள்
மற்றும் ஆப்பிரிக்க
நாடுகள் பலவற்றை
ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு பாதிவித் கலிபக்
என்ற மன்னன்
ஆண்டு வந்தான்.
அவன் காலத்தில்
எகிப்து நாட்டிலிருந்து
செசெரியா துறைமுகத்துக்கு
கப்பலில் இந்த
தங்க நாணயம்
கொண்டு வந்திருக்க
வேண்டும். அப்போது
கப்பல் கடலில்
மூழ்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த
கப்பலை புதைபொருட்களை
தேடும் குழு
ஒன்று கண்டுபிடித்தது.
ஆனால் அதில்
உள்ள தங்கம்
அனைத்தும் அரசுக்குதான்
சொந்தம் என்று
இஸ்ரேல் அறிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment