தமிழ், முஸ்லிம் உறவு குறித்து காத்திரமான கருத்துக்களை முன்வைத்து வந்த சம்பந்தன் ஐயா இப்பொழுது காட்டமான விமர்சன ரீதியான கருத்துக்களை கூறிவருவது ஏன்? இந்த விரி சல் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுகின்றதா? அடுத்து வரும் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இவ்வாறு பேசப்படுகின்றதா? இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக் கீம்.
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா 'பீ' (B) முகாம் என்ற கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.நியாஸ், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினர் நஜாத் உட்பட கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களும் பொது மக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
சமகாலத்தில் சுவாரஷ்யமான சில விஷய ங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வட-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினர் களான முஸ்லிம்கள் பற்றிய பிரஸ்தாபம் குறி த்து எமது மக்கள் மிகவும் ஆதங்கத்தோடு இருக்கின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார். இன்று அவரும் இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித் துக்கொள்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் பலவிதமான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் துளிர்விட ஆரம்பித்திரு க்கின்றது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு பிரச்சினைகளுக்கான தீர்வு மாத்திரமல்ல இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காண்பது குறித்த விடயங்களும் பேசப்படலாம் என நம்பப்படுகின்றது.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் இயக்கமென்ற அடிப்படையில் அண்மைக்காலமாக நடந்து வருகின்ற சில விடயங்களைப் பற்றி எங்களுக்கே வியப்பாக இருக்கின்றது. எதற்காக இவ்வாறு நாங்கள் விமர்சிக்கப்படுகின்றோம். ஏன் தமிழ்த் தேசியத் தலைமைகள் கொஞ்சம் தாறுமாறாகக் காட்டமாக பேசி வருகின்றன என்பதில் எனக்கே இன்னும் சரியான தெளிவு இல்லை. இவ்வளவு நட்புறவோடு நாங்கள் நடந்துகொள்கின்ற பொழுது மிகவும் பக்குவமாக வார்த்தைகளை பயன்படுத்துகின்ற போது தமிழ்த் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஏதோவோர் ஆற்றாமையின் காரணமாக காட்டமாக இருக்கின்றன என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அவை ஆற்றாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் என எங்களை நாங்களே சமாளித்து கொள்கின்றோம்.
ஏன் இந்த ஆற்றாமை ஏற்பட்டது என்ப தற்கு அவர்களிடத்திலேதான் விளக்கம் கோர வேண்டும். குறிப்பாக அண்மையில் எழுந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அந்த முதலமைச்சர் பதவியை பெற்றிருக்கின்றது என்ற நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரு கூட்டுக்கட்சியின் தலைவரான நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக ஒன்றை சொல்லியிருப்பதை இன்றும் கூட நான் பார்த் தேன்.
அதற்கு முன்னர் அண்ணன் சம்பந்தன் ஐயா கூட வழக்கமாக அவரது உரைகளில் காணப்படும் தமிழ் முஸ்லிம் உறவுகுறித்த சம்பவங்களை விடுத்து மிக காட்டமான விம ர்சன ரீதியான கருத்துக்களை முன்வைப் பது குறித்து நாம் வேதனையடைகின்றோம். இந்த விரிசல் வேண்டு மென்றே ஏதாவது அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுகின்றதா? அடுத்து வரும் தேர்தலை மையமாக வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இவ்வாறு பேசுகின்றனரா? என்று யோசித்தாலும் கூட அவ்வாறு அவர்கள் நடந்துகொள்வதனால் என்ன நன்மை கிடைக்கப்போகின்றது என்று எங்களுக்குப் புரியவில்லை.
முதலமைச்சர் விவகாரத்தில் இவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டு விட்டதா முதலமை ச்சர் விவகாரத்தில் நாங்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்பதை நான் மிகத்தெளிவாகச் சொல்ல வேண்டும். சில நியாயங்களை நாங்கள் பேச வேண்டும். வெறும் அறிக்கை விடுவதில் பயனில்லை. அவர்கள் விடும் அறிக்கைகளுக்கு மாற்று அறிக்கை விடுவதைக் கூட நான் தவிர்த்துக் கொண்டு வருகின்றேன்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மண்ணைச் சேர்ந்த உங்கள் மத்தியில் நான் இதனைக் கூற வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு முட்டி மோதிக் கொண்டு அரசியல் செய்ய நாங் கள் விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கிழக்கு மாகாணத்திலும் கண்டி கொழும்பு மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் களுக்காக மட்டும் பேசுகின்ற தலைமையொன்றல்ல. முல்லைத்தீவு போன்ற பிரதே சங்களில் வாழும் மக்களையும் மனதில் கொண்டுதான் நான் பேச வேண்டும். எனவே எனது வார்த்தைகளில் பக்குவம் பேணப்பட வேண்டும். நேர்மையும் தூர நோக்கும் சாணக்கியமும் இருக்க வேண்டும்.
ஆனால் இவை எவையுமே இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பேச்சுக்களில் தென்படவில்லை என்றுதான் நான் இன்று இந்த விஷயத்தை நோக்குகின்றேன்.
ஏனென்றால் இந்த கரைதுறைப்பற்று தேர்தலை எடுத்தாலும் இதற்கு முன்னர் நடந்த வட மாகாண சபைத் தேர்தலை எடுத்தாலும் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலை எடுத்தாலும் மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்ந்திருந்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்தோம் என் பதை குத்திக் காட்டிப் பேசு கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் அந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாங்கள் இர ண்டறக் கலக்காது தனித்துப்போட்டியிட்ட தன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த அரசின் வற்புறு த்தல்களுக்கு அடி பணியாமல் தொடர்ந்தும் எமது தனித்துவத் தைத் தக்க வைத்துக் கொண்டு போராடி னோம் என்பதை குறைந்தபட்சம் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களுக்கு கிளிநொச்சி பூநகரியில்போய் தேர்தல் கேட்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட முஸ் லிம் வாக்காளர்களில் எத்தனை பேர் வாக்க ளிக்க முன்வந்தார்களோ தெரியாது. எங்களது கட்சிக்கு நூற்றி ஐம்பத்தெட்டு வாக்கு கள் கிடைத்த காரணத்தினால் தமிழ் தேசி யக் கூட்டமைப்பு அந்த பூநகரி பிரதேச சபை யைக் கைப்பற்றியது. இல்லையென் றால் மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றிலைச் சின்னம் பூநகரியை வென்றிருக்கும்.
ஆனால் அமைச்சரவையிலும் வெளியில் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மிகவும் கோபத்தோடு என்னை சுட்டிக் காட்டி காட்டமாக விமர்சித்துப் பேசினார். அமை ச்சர் ரிஷாத் பதியுதீன், மஹிந்த ராஜபக் ஷவையும் டக்ளஸ் தேவானந்தாவையும் பஷில் ராஜபக் ஷவையும் தூண்டிவிட்டதற்கான காரணம் நாங்கள் தனித்து அங்கு தேர்தலில் போட்டியிட்டதனால்தான். பூநகரியில் தனித்துக் களமிறங்கப்போய் மஹிந்தவினதும் சகபாடிகளினதும் கடும் கோபத்திற்கு நான் ஆளா கினேன்.
நாங்கள் தனித்துவம் பேணியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அடைந்த நன்மை களைப் பற்றியும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு பூநகரியில் ஓர் ஆசனம் கிடைக்குமென்ற நப்பாசையில் நாங்கள் அங்கு போட்டியிட முன்வரவில்லை.
தமிழ் பேசும் மக்களின் பூமியை தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான அரசியல் இயக்கங்கள் ஆள வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு தனியான கொள்கை இருக்கின்றது. எங்களைச் சோ ரம் போனவர்களாகப் பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் நாங் கள் அமைச்சுப் பதவிகளுக்குச் சோரம் போன கூட்டமல்ல. அமைச்சுப் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு வந்த கூட்டம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் ஆட்சிகளை மாற்றிக் காட்டியிருக்கின்றோம்.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்ன ரான அரசியல் வரலாற்றில் அமைச்சர் ஒரு வர் மூன்று முறை பதவியை விட்டு வெளியே றிய மூன்று காரணத்தை காட்ட முடியுமா என நான் கேட்கின்றேன். இதைப் பற்றி நான் தமிழ் பேசும் தலைமைகளிடம் கேட்க விரும்புகின்றேன்.
அவர்கள் எங்களைக் கடிந்து பேசுகின்றார் கள் என்பதற்காக நான் அவ்வாறு நடந்து கொள்ள விரும்பவில்லை.
எங்களது அரசியல் நேர்மையென்பது முக்கியமானது. நீங்கள் நினைக்கின்ற மாதிரி நாங்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதும் பிழையான விஷயமாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் உரிமை களையும் பாதுகாப்பதற்கு எந்த முடிவை மேற் கொள்ள வேண்டும் என்பதை இந்தத் தலைமைதான் தீர்மானிக்க வேண்டும். எமது மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் இழுக்கின்ற பக்கம் எல்லாம் நாங்கள் போக வேண்டும் என்ற ஒரு நியதி கிடையாது.
நாங்கள் தவறான முடிவெடுத்திருக்கலாம். அந்த தவறை நினைத்து நாங்கள் வருந்தியிருக்கலாம். கிழக்கு மாகாண சபை முடிவுற்ற தருவாயில் அந்த முடிவை எடுப்பதற்கு சில நியாயங்கள் இருந்தன. அதிகாரத்தைக் கண்டு எங்களில் சிலர் அள்ளுண்டு சோரம்போகின்ற நிலைமை இருந்தது.
சமுர்த்தி நியமனம் மற்றும் வேறு அதிகார ங்கள் என்று பின்னால் போனவர்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாந்து போய் எங்களோடு மீண்டும் வந்து இணைந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வப்போது சிலருக்கு தடுமாற் றங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறான தடுமாற்றங்களிலிருந்து இந்த முழு இயக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற சவாலுக்கும் நான் அடிக்கடி உட்படுகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடையப்போகின்ற வெற்றிக்கு குறுக்காக நிற்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. வடக்கில் தேர்தலை நடத்தக்கூடாது என்று ராஜபக் ஷ அரசாங்கம் என்னென்ன வெல்லாமோ செய்யப்பார்த்தது. அதற்காக அமைச்சரவைக்குள் மஹிந்த ராஜபக் ஷவோடு ஏறத்தாழ ஒன்றரை மணித்தியாலங்கள் நான் வாதாடியிருக்கி றேன்.
ஜோர்தானுக்கு போயிருந்த நான் உடனடியாக நாடு திரும்பி விமான நிலையத்திலிருந்து நேராக அமைச்சரவைக் கூட்டத்திற்குச் சென்று பதின்மூன்றாவது சட்டத்திருத்த த்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் கொண்டு வந்த அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்த்து ஒன்றரை மணி நேரம் வாதாடியிருக்கின்றேன். மஹிந்த ராஜபக் ஷவும் நானும் மாறி மாறி ஒன்றரை மணி நேரம் வாதாடியிருக்கின்றோம். அந்த வாரத்தில் வெளிவந்த எல்லாப்பத்திரிகைகளிலும் அதனைப் பிரசுரித்திருந்தார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வெற்றிக்கு குறுக்கே நின்று மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்திற்குச் சாமரம் வீச வேண்டுமென்று நாம் அவரது அரசாங்கத்தில் சேரவில்லை. அவரது அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாங்கள் தனித்துவமாக போட்டியிடுவோம் எனப்பிடிவாதமாக இருந்த காரணத்தினால் பூநகரியில் மட்டுமல்ல மன்னார் மாவட்டத்திலும் பிரதேச சபைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்கு நாங்கள் காரணமாக இருந்தோமென்று மஹிந்த ராஜபக் ஷவிடம் எங்களைக் காட்டிக் கொடுத்தவர்களும் இப்பொழுது மைத்திரிப ால சிறிசேன ஜனாதிபதியாகியுள்ள அரசாங்கத்தோடு இருக்கின்றார்.
இப்போது எங்களை விட புதிய அரசின் சிறந்த நண்பராகத்தென்படுகின்ற மாதிரி அவர் கதைப்பார். முதலமைச்சர் பதவி பற்றி அவர் என்ன கூறினார் என்பது உங்களுக்கு தெரியும்.
முதலமைச்சர் பதவிக்காலத்தின் முதல் பகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நஜீப்.ஏ.மஜீத்திற்கு கொடுத்துவிட்டு எங்களது பங்கை அனுபவிப்பதற்கான கட் டம் வந்தபோது தான் ஆட்சி மாற்றம் ஏற்பட் டது.
இந்தக் கட்டத்தில் எங்களுக்குக்கிடைக்க இருந்த முதலமைச்சர் பதவியைப் பறித்து தங்களுக்குத் தர வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பிடிவாதமாக இருந்தனர்.
கிழக்கின் முதலமைச்சர் பதவியின் இரண்டாவது பகுதியை எங்களுக்குத் தருவதாக உடன்பாடு காணப்பட்டபோது தாமும் உடனிருந்ததாக நினைவுபடுத்தி எங்களுக்கு அதனைத்தருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருமனதுடன் முன்வந்த தற்கு நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் கிழக்கு மாகாண சபை யில் கூடிய உறுப்பினர்கள் எங்களோடு இரு ப்பதை ஆளுநருக்கு ஒப்புவித்து சத்தியப்பிரமானம் செய்து கொண்டோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அவர்களுடன் மூன்று நான்கு தடவைகள் கதைத் தோம். அவர்களது பிடிவாத போக்கில் எந்த விதமான தளர்வும் இல்லாத நிலையில் இறுதியில் நாங்கள் முடிவெடுத்தபோதும் அவர்களது மாகாண சபை உறுப்பினர்கள் கூடி எங்களோடு உடன்பாடு காண வந்தார்கள் அதையும் இப்பொழுது தலைமையின் அங்கீகாரமின்றி நடந்ததாக அவர்கள் கூறலாம்.
ஆனால் எங்களை பொருத்தவரை தலைமையின் அங்கீகாரத்துடன்தான் எல்லாம் நடக்கின்றன என்ற நம்பிக்கையில் அவர்க ளோடு நாங்கள் சில உடன்பாடுகளுக்கு வந் தோம்.
உடன்பாடுகளை நாம் நிச்சயமாக கெளரவிப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குக் கிடைக்க வேண்டிய அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து கிழக்கில் எமது தலைமை யில் ஒரு தேசிய அரசாங்கம் அமைந்தது என்ற பெருமையை நிலைநாட்டுவோம்.
இன்னும் பக்குவம் தவறி எடுத்தெறிந்து பேசுகின்ற நிலைமை தொடர்ந்து மிகவும் வேதனைக்குரியது.
ஏனென்றால் அண்ணன் சம்பந்தன் மூத்த அரசியல் வாதி. அவரோடு என்னை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியா சம். அவரிடமிருந்து படிக்க வேண்டியவை நிறைய உள்ளன. அவரை நான் நொந்து கொள்ள விரும்பவில்லை.
நான் அவரை விமர்சிப்பதன் மூலம் என் னை நான் உயர்த்திக் கொள்ள முடியும் என் றும் நான் நினைக்கவில்லை. அந்த மூத்த அர சியல் தலைமைக்கு முழுமையாக மதிப்பளி க்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நிலையில் அண்ணன் சம்பந்தனை எங்களது குருவாகத்தான் நான் பார்க்கின் றேன்.
இந்த இடத்தில் மஹாபாரதத்தில் வருகின்ற ஓர் உதாரணத்தை கூறிக் காட்ட விரு ம்புகின்றேன். இந்த முதலமைச்சர் பதவியை அண்ணன் சம்பந்தன் தங்களுக்குத் தர வேண்டுமெனக் கேட்டதை மஹாபாரதத்தில் வருகின்ற ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டுக்காட்ட நான் விரும்புகின்றேன். அது எவ்வளவு தூரம் எங்களது கட்சியையும் அரசியலையும் பாதிக்கும் என்கின்ற நிலையிலேயே இதனைக் கூறுகின்றேன். அது என்ன சம்பவம் என்றால் மஹாபாரதத்தில் ஏகலைவன் குரு துரோணாச்சாரியாரைப்பற்றி அதனை படித்த வர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தனது பயிற்சியை வில்வித்தையில் தனது மாணவன் ஏகலைவனுக்கு வழங்கிய துரோ ணாச்சாரியார் கடைசியில் கற்றுத் தேர்ந்த பிறகு குருதட்சணை என்று வரும்போது அந்த குரு தட்சணையை கேட்கும்போது துரோ ணாச்சாரியார் ஏகலைவனிடம் கேட்டது வேறெதையுமல்ல உனது கட்டை விரலை வெட்டித்தா என்று கேட்கின்றார். கட்டை விரலை வெட்டினால் வில்வித்தையில் ஏக வலைவனால் நீடிக்க முடியாது. அவ்வாறு துரோ ணாச்சாரியார் கட்டை விரலை ஏக லைவனிடம் கேட்ட மாதிரி தான் கேட்டத் தற்குச் சமமாகத்தான் முதலமைச்சர் பத வியை சம்பந்தன் ஐயா கேட்கின்றார் என்ற அளவிற்கு எங்களது உணர்வுகள் இருந்தன.
எவ்வளவு தூரம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் இந்தக் கட்டத்தில் முதலமைச்சர் பதவியை நாங்கள் கிழக்கில் பறி கொடு த்திருந்தால் பாதிக்கப்பட்டிருப்போம் அது எங்களுக்கு வாக்களித்த மக்களும் எங் களுக்கு எதிராக இயங்குகின்றவர்களும் எங்களைத் தூற்றுவதற்கு வாய்ப்பாக போய் விடும்.
அரசியலில் மூத்தவராக இருப்பதால் சம்பந் தன் ஐயாவை நான் குருவாக பார்க்கின்றேன். வில்வித்தை கற்றுக்கொடுத்துவிட்டு கட்டை விரலை கேட்பது போலத்தான் சம்பந்தன் ஐயா இச்சந்தர்ப்பத்தில் கிழக்கின் முதலமைச்சர் பதவியை கேட்பது அமைகின்றது. இதற்கப்பால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் நீண்ட நெடிய பயணத்தை தொடர வேண்டியவர்கள் நாங்கள் என்றார்.
நன்றி: வீரகேசரி
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment