தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த

கல்வி மற்றும் காணி அமைச்சு வழங்கப்படாமல் ஏமாற்றம்

தமிழ் மக்கள் கவலை

கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கை காரணமாக தமிழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்புடன் இருந்த கல்வி மற்றும் காணி அமைச்சு அவர்களுக்கு வழங்கப்படாது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம். ஐ.எம். மன்சூருக்கும் வழங்கப்பட்டிருப்பதே இந்த ஏமாற்றத்துக்குக் காரணமாகும்.
கிழக்கு மாகாண சபையின் கல்வி மற்றும் காணி அமைச்சை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதி கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர் பதவிகளுக்கு சீ.தண்டாயுதபாணி மற்றும் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.    இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சீ. தண்டாயுத பாணியைக் கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், மாகாணசபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கத்தை விவசாய கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச் சராகவும் நியமிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது.   இந்த நிலையில் நேற்றுக் கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதியும், வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் எம். ஐ.எம். மன்சூரும் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.    இவர்கள் இருவரும் நேற்றுக் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.   
இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் மீதமுள்ள விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரு அமைச்சுக்களும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த கல்வி மற்றும் காணி அமைச்சு வழங்கப்படாமல் தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என கவலை வெளியிடப்பட்டிருக்கிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top