உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
இந்தியா 9
விக்கெட்டுக்களால் ஹாட்ரிக் வெற்றி
இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் தொடங்கிய
நிலையில் நாணயற் சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் களமிறங்கி விளையாடினர். ஆட்டத் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 31.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா,உமேஷ் யாதவ் தலா
2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.SHAIMAN ANWAR சைமன் அன்வர் ஆகக் கூடுதலாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.
இதையடுத்து 103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்களைப்
பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment