இந்தியப் பிரதமர் மோடி கோட்
இந்திய பணத்தில்
ரூ.4.31 கோடிக்கு ஏலம்...
இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடியின் முழுப்பெயர் பொறிக்கப்பட்ட கோட் இந்திய பணத்தில் ரூ.4.31
கோடிக்கு ஏலம் போனது. குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லால்ஜி பாய் என்பவர் இந்த கோட்
ஆடையை மேற்கண்ட தொகைக்கு ஏலம் எடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகையின் போது
இந்தியப் பிரதமர் மோடி, தனது பெயர் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்தது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்தையடுத்து அந்த கோட் ஏலம் விடப்பட்டது.
ஏலம் மூலம் கிடைக்கும் தொகை பெண் குழந்தை பாதுகாப்பு, கங்கை தூய்மை திட்டத்திற்கு செலவிடப்பட
உள்ளது.
0 comments:
Post a Comment